Wednesday, March 7, 2018

இலங்கையில் facebook தடை செய்யப்பட்டது

பேஸ்புக் தடையை ஏற்படுத்தியது இலங்கை அரசு.

Wednesday, February 28, 2018

யோவான் 7:18

18சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.

Wednesday, February 21, 2018

ஆராதனை - மதுபான வெறி கொள்ளாமல் ஆவியினால் நிறைந்து தெய்வ பயத்தோடு ஆராதித்தால் சுகம்.

  ஆராதனை ஓய்வு நாளில் பரிசுத்தமாய் செய்யப்பட வேண்டியது. மதுபான வெறி கொள்ளாமல் ஆவியினால் நிறைந்து தெய்வ பயத்தோடு ஆராதித்தால் சுகம்.


  கொலோசெயர் 3

  தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
  கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
  வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.  எபேசியர் 5

  துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;

  சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,

  தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.

https://www.facebook.com/uyir.jesus
https://twitter.com/uyir22

Wednesday, February 14, 2018

துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக வரும் பிப்ரவரி 24ல் ரோம் கொலோஸியம் சிவப்பு நிறத்தில்

உலகம் முழுவதும் உள்ள துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக (தாக்கப்பட்ட சிரியா மற்றும் ஈராக்கில் முக்கிய தேவாலயங்கள்) பிப்ரவரி 24ல் ரோமானிய கொலோஸியமும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் சிவந்து நிற்கும்.


உதாரணமாக எகிப்திலும் துருக்கியிலும் உள்ள கிறிஸ்தவர்கள், "முன்னொருபோதும் இல்லாத அளவிலான துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர்".
வட கொரியா கிறிஸ்தவர்களுக்கு உலகில் மிகவும் ஆபத்தான நாடு. 

Christians in Egypt and Turkey, for instance, faced “unprecedented levels of persecution and suppression”. North Korea remains the most dangerous country in the world for Christians;

Tuesday, February 13, 2018

எபிரேயர் 11:9-10

விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;

ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். 

திருமணத்திற்கான காதல் நலம் ஆகும்

உலகிலுள்ள உயிரினங்களை ஆண்டுகொள்ள மனிதன் உலகில் சிருஷ்டிக்கப்பட்டான். ஆகவே அவற்றிற்கு பெயரிடும் பொறுப்பினை முதல் மனிதன் பெற்றுக் கொண்டான். பூமியை பாதுகாப்பதுமான பெரிதான வேலை அவனுக்கு கொடுக்கப்பட்டது.

அவனுடைய வேலையை குறித்து அவனோடு பேசுவதற்காக தேவன் தோட்டத்தில் உலாவும் மாலை நேரம் மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பான். 

ஆனால் அந்த மனிதன் தான் தனிமையாக இருப்பதாகவும், தான் ஆண்டுகொள்ளும் மிருகங்கள் துணைகளுடன் இருப்பதாகவும் கண்டதினால் சில கவலைகள் அவனுக்கு பிடித்திருக்கக் கூடும். 

தனிமையாக மனிதன் இருப்பதை குறித்து கடவுள் சிந்தித்திருக்கக் கூடும். ஆகவே மனிதன் தனிமையாக இருப்பது நல்லதா என கடவுள் அவனிடம் கூட கேட்டு தெரிந்து கொண்டிருக்கக் கூடும். 

மனிதன் எப்போதும் கடவுளை விட தனக்கேற்ற துணையை காண்பதில் தான் மகிழ்ச்சி கொள்வான் என்பதை கடவுள் அறிந்தி விட்டார் போலும், ஆகவே தான் மேலும் காத்திருக்காமல் ஒரு வேலை செய்யும் நோக்கோடு முதல் மனிதனிடம் வருகின்றார்.

முதல் வேலையாக மனிதனுக்கு ஏற்ற துணையை உருவாக்கும் பணியை மேற்கொள்ளத் தொடங்கினார். தமது சாயலாக மனிதனுக்கு ஒரு துணையை உருவாக்கிக் கொடுப்பது தேவனுடைய விருப்பத்திற்கு ஏற்றதாக இருந்திருந்தது.

ஆக மனிதனுக்கு துணையை உருவாக்கி கொடுத்து முதல் திருமணத்தை உலகில் நடத்தி வைத்த தேவன் தொடர்ந்தும் அக்காரியத்தை மனித சமுதாயத்தில் செய்து வருகின்றார். ஆகவே தான் அதற்கு குழந்தைகள் தேவனுடைய ஈவாக தரப்படுகின்றன.

கடவுள் மனிதன் முழுமையடையும் படி உருவாக்கிய திருமணம் எப்போதும் தேவனுடைய பார்வையில் ஆசீர்வாதம் தருவதாக அமைந்து வருகின்றது. 

 பேஸ்புக்

இலங்கையில் facebook தடை செய்யப்பட்டது

பேஸ்புக் தடையை ஏற்படுத்தியது இலங்கை அரசு.